கொரோனாவுக்கு எதிராக அஸ்வின் எடுத்த முயற்சி! குவியும் பாராட்டு!

சற்றுமுன் தமிழகம் விளையாட்டு
aswin
aswin

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் முயற்சி எடுத்து உள்ளார் அவயரின் இந்த முடிவால் பாராட்டுக்கள் குவிகின்றன.

14வது ஐபிஎல் சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இந்த சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது ? எங்கு ? நடத்தப்படும் என்று கேள்வி எழுந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்டாப்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர். இங்கிலாந்து வீரர்கள் லண்டன் மாநகருக்கு சென்றுவிட்டதாகவும், ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும், மேற்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் அவர்களது ஊருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இந்நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் N95 மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அறிவித்ததில் ‘N95 மாஸ்க்களை கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். அதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுக்கு இதை எப்படி விநியோகிப்பது என்று தெரிந்தால் எனக்கு கூறுங்கள்’ என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதன்மூலம் அனைவரும் மஸ்க்களை பயன்படுத்த வேண்டுமென்று விழிப்புணர்வை அஸ்வின் ஏற்படுத்துகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.