அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு

Published:

agri-krishnamurthyசென்னை: அதிமுக., மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற் பொறியாளர் கடந்த பிப்.22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டுமென அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென்றும் அமைச்சரின் உதவியாளர்களும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img