body-in-well

கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு கிராமத்தில் அல்லிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக ஊருக்குள் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியாத காரணத்தினால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய தினேஷை சடலமாக மீட்டுள்ளனர்.

அதன்பின் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending