யூட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த சிறுவன்! வாட்ஸ்அப்பில் பகிர்வு!

சற்றுமுன் தமிழகம்
Country bomb
Country bomb

கொரோனா ஊரடங்கால் ஊர் மக்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க, யூடிப்பை பார்த்த ஒரு சில்வண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்து வீடியோ வெளியிட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிறுவன், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்று யூட்யூபில் தேடியுள்ளான். அவனது தேடலுக்கு அதில் பதில் கிடைக்கவே, நாட்டு வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து சக சிறுவர்கள் முன்னிலையில் அதனை வெடிக்கச் செய்து வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளான்.

இந்த வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் தீவிரமாக பரவிய நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நாச்சியார்கோவில் காவல்துறையினர், 17 வயது சிறுவனை கைது செய்தனர்

17 வயதாகும் அந்த சிறுவனை பிடித்து விசாரிக்கையில், அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வந்து, தனது நண்பர்களுடன் நாட்டு வெடிகுண்டை தயார் செய்து வீடியோவாக எடுத்து தெரியவந்துள்ளது.

சிறுவனுக்கு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அறிமுகமான பீகாரைச் சார்ந்த சிறுவன் ஒருவன், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முறை குறித்து விளக்கி இருக்கிறான்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அதன் அடிப்படையில், யூடிப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட சிறுவன், அதனை தயாரித்து நண்பர்களுக்கு வெடித்து காண்பித்து தன்னை கெத்து என்று கூறி மகிழ்ந்துள்ளான்.

இது தொடர்பான வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கிய காவல்துறையினர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முறையில் உள்ள வீடியோக்களையும் நீக்குவதற்கு யூ டியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் திருந்த ஜெயிலுக்கு அனுப்பினால், அவர்கள் உள்ளே சென்று மற்றொரு சட்டவிரோத மற்றும் சமூக அச்சுறுத்தல் செயலை கற்றுக்கொண்டு வெளியே வந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.