கொரோனா: பில்லா பாண்டி கதாசிரியர் எம்.எம்.எஸ்.மூர்த்தி உயிரிழப்பு!

சற்றுமுன் சினிமா தமிழகம்
Murthi
murthi

தமிழ் சினிமா மேனேஜரும், பில்லா பாண்டி படத்தின் கதாசிரியருமான எம்.எம்.எஸ்.மூர்த்தி(48) கொரோனா பெருந்தொற்றால் மரணம் அடைந்தார். தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூ அருகே அணைக்கரப்பட்டியில் பிறந்தவர் மூர்த்தி. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்த, மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் கலந்த பில்லா பாண்டி படத்தில் எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டினர்.

மூர்த்தியின் மரணம் அவரது நட்பு வட்டத்தையும், திரையுலகினரையும் கலங்க வைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.