December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது!

dmk stalin - 2025

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு குறைந்த தொகையையே வழங்குவதாகவும், இத்தகைய சூழலில் தமிழகத்தில் எரிபொருள் விலைகளை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகி விடும் என்று கூறியிருக்கிறார். இது தவறு.

anbumani 2
anbumani 2

மத்திய அரசின் கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வசூலிக்கப்படுவது உண்மை. அதில் பெருந்தொகையை சிறப்புத் தீர்வைகள் என்றும், வேளாண் கட்டமைப்புத் தீர்வை என்று அறிவித்திருப்பதால் அதில் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை. மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட வேண்டும்; கலால் வரியில் மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால் தமிழகத்தில் இதை புள்ளி விவரங்களுடன் வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆனால், நான் கேட்க விரும்புவது மத்திய அரசு கலால் வரியை ஒரே நாளில் உயர்த்தி விடவில்லை. 2014&ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13&ஆம் தேதி வெளியிட்ட போதும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன. அவற்றைக் கணக்கிட்டு தான் திமுக தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்? சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா?

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசுக்கு எந்த வகையில் சாதகமாகும் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், குறைத்தாலும் அதன் பாதிப்பும், பயனும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தான் கிடைக்கும். இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்; அதைத் தான் மாநில அரசு பார்க்க வேண்டும். வரிகளைக் குறைக்காமல் இருக்க சாக்குகளைக் கூறக்கூடாது.

மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார். சென்னையின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில் மாநில அரசின் வரி 34%, அதாவது சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால் ரூ.26.30. ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் கூட மறுக்க முடியாது.

உதாரணமாக கடந்த மே 7&ஆம் தேதி திமுக அரசு பொறுபேற்ற போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15. அதிலிருந்து தமிழக அரசுக்கு கிடைத்த வரி ரூ. 23.60. அதன்பின் கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.99 உயர்ந்துள்ளது. அதன்மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் மதிப்பு கூட்டு வரியின் பங்கும் லிட்டருக்கு ரூ.1.30 அதிகரித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.10 குறைத்தால் கூட அரசுக்கு இழப்பு ஏற்படாது. அதுவும் கொரோனா பரவலாம் வாழ்வாதாரங்களை இழந்து, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அளவுக்கு வரிக் குறைப்பு மிகப்பெரிய உதவியாகவும், வரமாகவும் இருக்கும்.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழ்நாடு மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளைக் குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை. திமுக அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பாதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக்கூடாது… என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories