வீட்டு வேலைக்கு வந்த பெண்! தனியாக இருந்த எஜமானியை கொன்று நகை பணம் கொள்ளை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder
murder

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, நகைகளை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் நடராஜபுரம் 4-ல்வது தெருவில் வசித்து வருபவர் ஜானகி (50). இவரது கணவர் பாலகிருஷ்ணன். கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவரது மகன் ராமச்சந்திரன் (28), சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் ஜானகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது, அவருக்கு தூத்துக்குடியை சேர்ந்த ஜெனிபர்(25) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. சிகிச்சைக்கு பின் நாமக்கல் திரும்பிய ஜானகி, சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் வசித்து வந்த ஜெனிபரை, தனது வீட்டிற்கு அழைத்து வந்து வந்துள்ளார்.

அவர் வீட்டில் தங்கியிருந்து ஜானகிக்கு பணிவிடை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் ஜானகி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த நகைகளும் திருடுபோயின.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இதுகுறித்து, தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெனிபர் நகைக்கு ஆசைப்பட்டு ஜானகியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தருமபுரியில் பதுங்கியிருந்த ஜெனிபரை போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.