மின்சாரம் பாய்ந்து 19 வயது இளம் பெண் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
shock
shock

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பெருமாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இவருக்கு 19 வயதுடைய முத்துலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் மாடுகள் வளர்த்து வருவதால் அந்த மாட்டுத் தொழுவத்தை முத்துலட்சுமி தினமும் சுத்தம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் முத்துலட்சுமி மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அங்குள்ள இரும்புக் கம்பியை எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி அங்குள்ள மின் ஒயரின் மீது மோதியதால் அதன்மூலம் மின்சாரம் முத்துலட்சுமியின் உடலில் பாய்ந்துவிட்டது.

இதனால் முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.