deer - 2026

சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்த புள்ளி மான் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதிகளில் பெரும்பாலான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சில நேரங்களில் மலையில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீர்காகவும், பிற விலங்குகளை விரட்டுவதற்கு வருகின்றது.

அப்போது விலங்குகள் தேசிய நெடுஞ் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ஆண் புள்ளி மான் ஒன்று பழவூர் காவல் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் திலீபன் உத்தரவின்படி, வனக்காப்பாளர் பிரதீபா, வனக்காவலர் விதின் ராஜ், வனகுழு தலைவர் வேல்முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வனச்சரக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தண்ணீர் கிடைக்காததால் மலைப்பகுதியில் வெளியேறும் விலங்குகள் அடிக்கடி வாகனம் மோதி இறக்கின்றது.

எனவே இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலை அடிவாரப் பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending