இன்று 6 மணிக்கு வலிமை அப்டேட்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai 1
valimai 1

அஜித் நடித்து வரும் வலிமை திரைபடத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள்.700 நாட்கள் கடந்தும் ஒரு அப்டேட் வராததால் அப்டேட் எப்போது தான் வரும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து அஜித் ரசிகர்கள் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.