ரீ எண்ட்ரி கொடுக்கும் சுவாதி!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
swathi reddy - 2026

தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி என்கிற சுவாதி ரெட்டி.

குனிந்த தலையும் தெளிந்த பார்வையும் அழகிய மௌன சிரிப்பும் என முதல் படத்திலேயே கிராமத்து பெண் சாயலில் சக்கப்போடு போட்டிருப்பார்.

அதனை தொடர்ந்து யாக்கை போராளி வடகறி போன்ற படஙகளில் நடித்த சுவாதிக்கு காலம் வெகுவாய் கைகொடுக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் பிண்ணனி பாடகி என பன்முகங்கள் கொண்ட சுவாதி படவாய்ப்பு குறையவே 2018ல் இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு நபரை திருணம் செய்து கொண்டார்.

swathi - 2026

விமான பயணத்தில் துவங்கியதாம் இவர்களின் முதல் சந்திப்பு. அவர் ஒரு ஏரலைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறாராம்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்ட சுவாதிக்கு இப்போது மீண்டும் ஒரு சில தெலுங்கு படங்கள் புக்கிங் ஆகி வருகிறதாம்.

ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டும் உள்ளாராம் நல்ல கம்பேக்கை தரும் என்பதில் உறுதியாக இருக்கிறது சுவதி ரெட்டியின் வட்டாரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.