புதிய மசோதாவுக்கு எதிராக இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published:

insurance-strike சென்னை: புதிய காப்பீட்டு மசோதாவைக் கைவிடக் கோரி, திங்கள் கிழமை இன்று இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, இன்சூரன்ஸ் தொடர்பான பணிகள் முடங்கின. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், யுனெட்டெட் இந்தியா, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியன்டல் இன்ஸூரன்ஸ், ஜி.ஐ.சி, எல்.ஐ.சி ஆகிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று பணிக்கு வராததால், காப்பீட்டுத் தொகை வசூல் உள்ளிட்ட இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடங்கின. தமிழகத்தில், ஜி.ஐ.சி, எல்.ஐ.சி.யைச் சேர்ந்த ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையினைக் கண்டித்து, ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்தனர். மேலும், மண்டல, கிளை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img