சரத் பொன்சேகாவை விடுவித்தது நீதிமன்றம்: நிரபராதி என தீர்ப்பு

Published:

fonseka கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அறிவித்து விடுவித்தது. இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, ராஜபட்ச ஆட்சியின்போது விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். பின்னாளில் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற ராஜபட்சவால், பொன்சேகா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை அடுத்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. இதை அடுத்து, பொன்சேகா மீதான வழக்குகள் கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டகளாக நடைபெற்று வந்தன. அண்மையில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோல்வி அடைந்து, சிறிசேனா அதிபராகப் பொறுப்பேற்றார். உடனே, சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அளித்து சிறிசேனா அறிவித்தார். இந்நிலையில் சரத் பொன்சேகா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் அளித்த தீர்ப்பில், சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக சில்வா ஆகியோர் நிரபராதிகள் எனக் கூறப்பட்டு, அவர்களை விடுதலை செய்தார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img