ஜப்பானில் குழந்தைய இப்படி கொஞ்சறாங்களாம்..!

bag baby
bag baby

பெருந்தொற்று காலத்தில் அன்பை வெளிப்படுத்த புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது ஜப்பான் நாடு. ஜப்பானியர்கள் குடும்ப உறவுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பவர்கள் என்பது உலகறிந்தது.

அதேபோல், ஆரோக்கியமான வாழ்வியல் முறையால் ஜப்பானில் மக்கள் நீண்ட வயது வரை வாழ்கின்றனர் என்பதும் தெரிந்த தகவலே.

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க அதுவும் பெருந்தொற்று காலத்தில் இறுக்கங்களைத் தவிர்த்து இன்பம் காண ஜப்பானில் தற்போது புதிய நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்படுகிறது.

ஜப்பானில் புதிதாகப் பிறக்கும் குழந்தையை குடும்பமே சேர்ந்து கொண்டாடும் பாங்கு மிகவும் அழகானது.
அத்தனை பேரும் சேர்ந்து குழந்தையை வரவேற்று குடும்பமாகக் கூடி பல்வேறு சடங்குகளைச் செய்து மகிழ்ந்திருப்பர்.

ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் அந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இதனால், புதிதாக பிறக்கும் குழந்தையை சொந்த பந்தங்களிடம் காட்ட இயலாமல் புதிய பெற்றோரும் மனமுடைந்தனர்.

அப்போதுதான் முளைத்தது ஒரு புதிய பழக்கம். தம்பதியர் தங்களின் குழந்தையின் எடையளவில் ஒரு அரிசிப் பையை ஏற்பாடு செய்கின்றன. அந்த அரிசிப் பையை விதவிதமாக அலங்காரமும் செய்கின்றனர். சிலர் அதை சிறிய போர்வையில் சுற்றி பார்ப்பதற்கு குழந்தை போலவே உருவாக்குகின்றனர்.

அந்த அரிசிப் பையை, அவர்கள் தங்களின் உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். குழந்தையை நேரில் வந்து கொஞ்ச முடியாதவர்கள். கிடைக்கப்பெற்ற அரிசிப் பையைக் குழந்தையாகப் பாவித்து கொஞ்சி வாழ்த்துகின்றனர்.

அந்த வாழ்த்து குழந்தைக்கு சென்று சேரும் என நம்பப்படுகிறது. வயதானோர் அந்த அரிசிப் பையை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் மகிழ்ச்சியைக் கடத்தி, பரப்பி பெருந்தொற்று காலத்திலும் பேரின்பம் காண்கின்றனர் ஜப்பானிய மக்கள்.

களைகட்டும் புதிய தொழில்:

இந்த அரிசிப் பைகளைத் தயாரிக்க புதுப்புது நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பையின் விலையும் எடையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 3.5 கிலோ எடை கொண்ட ஒரு பையின் விலை ஜப்பானிய மதிப்பில் 3,500 யென் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் அரிசிக் கடைகளே இதை சைட் பிசினஸாக ஆரம்பித்துள்ளன. கோமே நொ ஜோடோ ஹோஷிமியா என்ற கடையின் உரிமையாளர் நாருவோ ஓனோ கூறுகையில், “14 வருடங்களுக்கு முன் எனக்கு மகன் பிறந்தார். அப்போது எனது மகிழ்ச்சியை தூரப்பிரதேசங்களில் வாழும் எனது உறவினர்களுடன் பகிர விரும்பினேன். அப்போது நான், எனது மகன் எடை கொண்ட அரிசிப் பையை அலங்கரித்து அதனை எனது உறவினர்களுக்கு அனுப்பிவைத்து மகன் பிறந்த தகவலைக் கூறினேன். இதேபோல், திருமண நிகழ்வின் போது மணமனும், மணமகளும் தங்களின் பெற்றோருக்கு தங்களின் சிறு வயது புகைப்படம் அச்சிடப்பட்ட அரிசிப் பையை பரிசாகக் கொடுத்து தங்களுக்குப் பேறு தந்தமைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு பரிசுப் பையை உருவாக்கினேன். இப்போது பெருந்தொற்று காலத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் நான் செய்த அரிசிப் பை அன்பளிப்பை உயிர்ப்பித்துள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.

இந்த அரிசிப்பை அன்பளிப்புத் தொழிலில் ஜோடோ ஹோஷிமியா கடைதான் முன்னோடி. ஆனால், தற்போது இதே கான்செப்டைக் கொண்டு நிறைய கடைகளும் வந்துவிட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories