620 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை!

baby2
baby2

ஈரோடு தனியார் மருத்துவமனையில் 620 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு, மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக 1.8 கிலோவாக உயர்ந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த திருமணமான தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி இருந்து வந்தனர். அவர்கள் ஈரோடு சுதா மருத்துவமனையில் செயற்கை கருவுறுதல் மூலம், முதன்முறையாக கர்ப்பமாகினார்.

கர்ப்ப காலத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததுடன், பனிக்குடநீர் மிக குறைவாக இருந்தது. இதனால், 25-வது வாரத்திலேயே அவசர அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், 620 கிராம் மட்டுமே இருந்தது.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், நுரையீரலில் ரத்தக்கசிவு மற்றும் குறைமாத தன்மையால் நுரையீரல் முதிர்ச்சியின்மை காரணமாக, 2 வாரத்திற்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்துடன் உடல் வளர்ச்சி சரியாக இல்லாததால், குழந்தைக்கு ஊசி மூலம், நரம்பு வழியாக தேவையான சத்துகள் கொடுக்கப்பட்டது. மேலும், 4 முறை ரத்தம் செலுத்தப்பட்டது.

baby
baby

இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவில், குழந்தைக்கு 100 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், குறைமாதம் மற்றும் எடை குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் விழித்திரை பிரச்சனை மற்றும் மூளையில் ரத்தக்கசிவு போன்றவை குழந்தைக்கு இல்லை. சிகிச்சை முடிந்து குழந்தை டிஸ்சார்ஜ் ஆகும்போது, குழந்தையின் எடை 1.8 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.

மிகவும் மோசமான நிலையில் இருந்த குழந்தைக்கு, சிறப்பான சிகிச்சை அளித்த பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்கள் எஸ்.ரங்கேஷ், என். கெளரிசங்கர் ஆகியோருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories