
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக நடித்து சின்னக் கலைவாணராக வாழ்ந்து திடீரென மாரடைப்பால் ஏப்ரல் 17 ம் தேதி காலமானவர் நடிகர் விவேக்.
இவரது திடீர் மறைவு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
நடிகர் விவேக் கடைசியாக இந்தியன் 2, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த வரிசையில் நடிகர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய எங்க சிரிங்க பாப்போம் என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சி தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் பவர் ஸ்டார், பிரேம்ஜி, சதீஷ், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் சின்னக்கலைவாணர் விவேக் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வார் .நடிகர் விவேக் அவர்களின் கடைசி படைப்பை பகிர்ந்துகொள்வது ஒரு கௌரவம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
He will live forever in our hearts.. It's an honour to share @actor_vivek sir's last work who made us laugh and also passed on socially responsible n progressive thoughts! pic.twitter.com/vz1VVoDHqP
— Suriya Sivakumar (@Suriya_offl) August 13, 2021