விங் கமாண்டர் வருண் சிங்குக்கு ஷெளரிய சக்ரா விருது!

varun Singh 1 - 2026

மிகச் சிறப்பாக பணியாற்றிய, இலகு ரக போர் விமானப் பிரிவின் விமானி, விங் கமாண்டர் வருண் சிங்குக்கு குடியரசுத் தலைவரின் ஷெளரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் இலக ரக போர் விமானப்பிரிவின் விமானி விங் கமாண்டர் வருண் சிங். பணிமனைக்கு சென்று திரும்பிய இலகு ரக போர் விமானத்தில், அனைத்து கருவிகளும் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, இவர் கடந்த 2020 அக்டோபர் 12ம் தேதி, அந்த விமானத்தில் பறந்தார்.

அதிக உயரத்தில் விமானத்தில் பறந்தபோது, விமானி அறையின் காற்றழுத்த கருவி பழுதடைந்தது. இதை சரியாக கண்டுபிடித்த விங் கமாண்டர் வருண் சிங், விமானத்தை கீழே இறக்கினார். கீழே இறங்கும்போது, விமான கட்டுப்பாட்டு கருவியும் செயல் இழந்தது.

இதனால் போர் விமானம் முழு கட்டுப்பாட்டையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்ற சூழல், போர் விமானத்தில் ஒரு போதும் ஏற்பட்டதில்லை. விமானம் தாறு, மாறாக பறந்தது. மிகுந்த உடல் மற்றும் மன அழுத்த சூழ்நிலையிலும், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், தனது அனுபவத்தால், விமானத்தை கட்டுப்பாட்டுடன் விங் கமாண்டர் வருண் சிங் இயக்கினார்.

shaurya chakra - 2026

10,000 அடி உயரத்தில் பறந்தபோது, விமானம் முழு கட்டுப்பாட்டையும் இழந்தது. இது போன்ற சூழ்நிலையில், விமானி, விமானத்தை விட்டு வெளியேறும் சுதந்திரம் உள்ளது.

ஆனால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்ட போதிலும், அவர் தனது தைரியம் மற்றும் திறமையால் போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானத்தில் ஏற்படும் தவறை துல்லியாக ஆய்வு செய்யவும், இது போன்ற தவறுகள் இலகு ரக போர் விமானத்தில் நடைபெறுவதை தடுக்கவும், இச்சம்பவம் காரணமாக இருந்தது.

விங் கமாண்டர் வருண் சிங்கின் உயர்ந்த தொழில் முறை, நிதானம், விரைவாக முடிவெடுத்தல் ஆகியவை காரணமாக, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், அவர் விமான இழப்பு, பொதுச் சொத்து மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பை தவிர்த்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இந்த விதிவிலக்கான வீரதீர செயலுக்காக, விங் கமாண்டர் வருண் சிங்குக்கு ஷெளரியா சக்ரா விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories