தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை ‌எச்சரித்த நடிகை!

சற்றுமுன் சினிமா
sherin
sherin

தமிழில் ‘துள்ளுவதோ இளமை’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘விசில்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘பீமா’, ‘நண்பேன்டா’ மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஷெரீன்.

ஏற்கனவே அவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்றாலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே இருக்கிறது. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் ஏர்போர்ட்டில் சந்தித்தவர்கள், பேச்சு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை மேற்கொண்டு, தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.