கடலில் மிதந்த வந்த கடிதம்! வியப்படைந்த பெண்மணி!

class letter
class letter

ஒரு கண்ணாடி குப்பியில் கனடா நாட்டில் கடலில் வீசப்பட்ட கடிதம் சுமார் 4,800 கிலோமீட்டர் கடலில் பயணித்து பிரிட்டன் நாட்டில் இருக்கும் தெற்கு வேல்ஸ் நகரத்தில் ஒருவரிடம் கிடைத்திருக்கிறது.

வேல்ஸில் இருக்கும் ப்ரினா நகரத்தைச் சேர்ந்த 52 வயதான அமண்டா டிட்மார்ஷ் கடற்கரை ஓரத்தில் தன் இரு நாய்களோடு நடந்து சென்று கொண்டிருந்த போது கடற்பாசியுடன் கூடிய ஒரு கண்ணாடிக் குப்பியைக் கண்டிருக்கிறார்.

அதைக் கண்டுபிடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார். முன்பு தன் குடும்பத்தினரிடம் தான் எப்போதும் புதையலை வேட்டையாடுவதாக வேடிக்கையாகக் கூறியதையும் நினைவுகூர்கிறார்.

இந்தக் கடிதத்தை கடலில் வீசி எறிந்த மீனவரிடம் இருந்து பதில் வரும் என காத்திருக்கிறார் அமண்டா.

கனடாவில் வீசி எறியப்பட்ட அந்த கண்ணாடிக் குப்பி சுமார் 4,800 கிலோமீட்டர் பயணித்து தெற்கு வேல்ஸ் நகரத்தை வந்தடைந்து இருக்கிறது. அந்தக் கடிதம் கடந்த 2020 நவம்பரில் கடலில் வீசி எறியப்பட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வெல் ஆஃப் க்ளாமார்கன் கடற்கரையில் அமண்டா டிட்மார்ஷ், லேப்ரடூடல் டெய்சி மற்றும் ஜேக் ரஸ்ஸல் ஆலி என்கிற இரு நாய்களோடு நடந்து சென்று கொண்டிருந்தார். கடற்கரையில் கடற்பாசி, கடல்சிப்பி போன்றவைகளோடு இருந்த காலி வொயின் பாட்டிலைக் கண்டார்.

“அதைக் கண்டெடுத்த போது, அந்த கண்ணாடிக் குப்பி எந்த வித சேதமும் இல்லாமல் இத்தனை தூரம் வந்திருப்பதை நினைக்கும் போது அது அருமையாக இருந்தது. அக்குப்பிக்குள் புதையல் போல ஏதாவது இருக்கும் என கருதினேன்” என்கிறார் அமண்டா.

இதைத் தனியாக திறக்கும் அளவுக்கு சிறப்பானது” என தான் கருதியதாகவும், தன் மகன் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்ததாகவும் கூறுகிறார்.

“இது உண்மையிலேயே மிகவும் அருமையான ஒன்று. நான் என் மற்றொரு மகன் மற்றும் மகளுக்கும் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர்களும் என்னைப் போலவே மிகவும் மகிழ்ந்தார்கள். இதை நம்ப முடியவில்லை”.

“நான் கடற்பாசிகளில் புதையலைத் தேடுவதாக எப்போதும் என் அம்மாவிடம் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இப்போது அப்படி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன்”

இந்தக் கடிதம் ஜான் க்ரஹம் என்கிற பனி நண்டு பிடிக்கும் மீனவரிடம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்தக் கடிதத்தைக் கண்டெடுப்பவர் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தன் மின்னஞ்சலையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த பாட்டில் கச்சிதமாக அடைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு சிப் லாக் பைக்குள் கடிதம் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது” என்கிறார் அமண்டா. ஜான் க்ரஹாமிடம் இருந்து பதில் வரும் என உற்சாகத்தோடு காத்திருக்கிறார் அவர்.

அந்த பாட்டில் தற்போது ரோண்டா சியான் டஃப் என்கிற இடத்தில் இருக்கும் அமண்டாவின் வீட்டில், க்ரீன் ஹவுஸ் என்றழைக்கப்படும் தோட்டம் போன்ற அறையில் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories