தடுப்பூசி போட அச்சப்பட்டு மது குடிக்கும் கிராம மக்கள்!

vaccine - 2026

கர்நாடக மாநிலம் யாதகிரி அருகே கொரோனா தடுப்பூசி போட பயந்து கிராம மக்கள் மதுகுடித்து வருகிறார்கள்.

இதனால் தடுப்பூசி போட தினமும் கிராமத்துக்கு வரும் சுகாதாரத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடருகிறது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் பல்வேறு கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை கிருமிநாசினியால் கழுவுதல் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மதுகுடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அதாவது யாதகிரி மாவட்டம் ஒனகெரே கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர், ஆஷா திட்ட ஊழியர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் தடுப்பூசி போட பயந்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். மதுபானம் குடித்தால் கொரோனா தடுப்பூசி போடமாட்டார்கள் என்பதால் அவர்கள் தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க தொடங்கினர்.

கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதாகவும், இதனால் தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினரும், ஆஷா திட்ட ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது அவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். சுகாதாரத்துறையும், ஒனகெரே கிராம மக்களிடம் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories