மோசமடைந்த ‘பெண்கள் நிலை’! தாலிபான் குறித்து அச்சத்துடன் பகிர்ந்த கல்லூரி மாணவி!

thalibhan
thalibhan

தாலிபான்களின் உண்மை முகம் குறித்து 22 வயது மாணவி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானைத் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில், இனிமேல் அங்கு என்ன நடக்கப் போகிறதோ என்பது தான் உலக நாடுகளின் பெரும் கவலையாக உள்ளது. ஒரு பக்கம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் போராடும் நிலையில் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ன ஆகப் போகிறதோ என்பதும் பெரும் அச்சமாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகள் இனிமேல் படிப்பைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதோ என்ற பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ஆயிஷா குராம் என்ற 22 வயது மாணவி ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய முதல் நாளிலேயே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். எனது வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது என எனக்குத் தோன்றியது. ஆனால் கதவைத் திறந்து பார்க்கும் நிலையில் நான் இல்லை. அப்போது தான் எனது வீட்டு வாசலில் துப்பாக்கி சுடும் சத்தத்தையும், அலறல் சத்தத்தையும் கேட்டு என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து இருந்து பார்த்தேன்.

மேலும் சில திருடர்கள் தங்களைத் தாலிபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் பொருட்களையும், கார்களையும் திருட முயன்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்றைய தினம் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகளுக்கு மட்டும் குட்பை சொன்னார்கள். பெண்கள் இனி பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாது என்ற தாலிபான்களின் மிரட்டலைப் பிரதிபலிப்பதாகவே அந்த குட்பை இருந்தது.

நாங்கள் பெண்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என தாலிபான்கள் கூறினார்கள். ஆனால் நடப்பதைப் பார்த்தால் நிச்சயம் அப்படி இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

எங்களது எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்பது குறித்த அச்சம் நிலவுகிறது. ஆனால் உலகம் எங்களைத் தனித்து விடாது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பொழுதையும் கழித்துக் கொண்டு இருக்கிறோம்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories