நடுவானில் வெடித்த சாம்சங் போன்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Alaska airlines
Alaska airlines

பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போனால் நடுவானில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கட் கிழமை மாலை நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி ஒருவர் திடீரென அலற ஆரம்பித்தார். இதனால் மற்ற பயணிகள் பதற்றமான நிலையில், சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த Air Hostess-ம் அதிர்ச்சியில் கத்த ஆரம்பித்தார்.

அப்போது தான் என்ன நடக்கிறது என்பது மற்ற பயணிகளுக்குப் புரிந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் சாம்சங் கேலக்ஸி ஏ 21 போன் திடீரென வெடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

உடனே அந்த விமானம் மிக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஏறக்குறைய 128 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் வெளியிட்ட தகவலில், விமானத்தின் குழுவினர் பேட்டரி கன்டெய்ன்மென்ட் போன்ற தீயை அணைக்க பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டு உடனடியாக தீயை அணைத்துவிட்டனர். எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் ஸ்மார்ட் போன் வெடித்து எரிந்த சம்பவத்தால், பயணிகள் அனைவரும் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள்.

இது தொடர்பாகப் பேசிய பயணி ஒருவர், ”திடீரென அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்குள் போன் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடத்தில் எங்கள் இதயத்துடிப்பே நின்று விட்டது” என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சாம்சங் நிறுவனம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காதது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories