அரிசியை தங்கமாக்கும் சங்கு! சிக்கிய மோசடி கும்பல்!

thiruvanamalai
thiruvanamalai

திருவண்ணாமலையில் அரிசியில் வலம்புரி சங்கை வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும் எனக்கூறி, சதுரங்க வேட்டை பட பாணியில் 2 கோடி ரூபாய்க்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த கிரிவலப்பாதையில் வாலைசித்தர் ஆசிரமம் நடத்தி வரும் கோவிந்தராஜ், ஜோதிடராக உள்ளார்.

தண்டராம்பட்டை அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த பரணியை தொடர்பு கொண்ட இவர், தங்களிடம் அபூர்வ வலம்புரி சங்கு இருப்பதாகவும், அந்த சங்கை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரராகி விடுவார்கள் எனவும், அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாலை ஊற்றினால் தயிராகும் என்றும், அரிசியை வைத்தால் தங்கமாகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பரணியை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பாபா கோயில் அருகே வருமாறு அழைத்து உள்ளார்.

அதன்படி, அவர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்தராஜுடன் ஒரு கும்பல் இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பரணி, அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 கோடி ரூபாய் மதிப்பிலான வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் கோவிந்தராஜ், குப்பன், நாகராஜ், சதீஷ், உப்பட 7 பேர் சிக்கினர். ஆனால் சங்கு கொண்டு வந்த நபர் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வலம்புரி சங்கு எனக் கூறி போலி சங்கை ஏமாந்தவர்களிடம் மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories