train 1 - 2026

ஏசி வகுப்பில் மலிவான கட்டணத்தில் சாதாரண மக்களும் இனி ரயில் சுகமாக பயணத்தை அனுபவிக்க முடியும்.

3ஏசி எகானமி வகுப்பின் கட்டணத்தை இந்திய ரயில்வே நிர்ணயித்துள்ளது. இந்த சேவையை நோக்கி மக்களை ஈர்க்க, அதன் கட்டணம் ((AC 3 Economy Class Fare) ஏசி 3 கட்டணத்தை விட குறைவாக இருக்கும்.

ஏசி 3 எகானமி வகுப்பிற்கான கட்டணத்தை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஏசி 3வது வகுப்பின் கட்டணத்தை விட அதன் கட்டணம் சுமார் 8 சதவீதம் குறைவாக இருக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் மக்கள் இந்த புதிய எகானமி வகுப்பில் பயணம் செய்ய விரும்புவார்கள்

தகவலின் படி, பஞ்சாபின் கபூர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏசி 3 எகனாமி வகுப்பின் 50 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுபோன்ற 800 பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே (Indian Railway) திட்டமிட்டுள்ளது. இதில், 300 பெட்டிகள் சென்னையில் ரயில்வே பெட்டி தொழிற்சாலையிலும், ராய்பெரிலி மாடர்ன் ராயி பெட்டி தொழிற்சாலையில் 285 பெட்டிகளும், கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் 177 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படும்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

வழக்கமாக, ஏசி 3 மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் 72 பெர்த்துகள் உள்ளன, ஆனால் ஏசி 3 எகனாமி வகுப்பில் 83 பெர்த்துகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, பக்கவாடில் உள்ள 2 பெர்த்துகள் 3 பெர்த்துகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால், AC3 எகானமி வகுப்பில் பெர்த்துகளின் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், கட்டணத்தை குறைப்பதன் மூலம், ரயில்வே அதன் பயனை பயணிகளுக்கு திருப்பித் அளிக்க விரும்புகிறது.

ஏசி 3 வகுப்பை தவிர, மற்ற அனைத்து வகுப்புகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 20-25% வரை ரயில்வே இழப்பைச் சந்தித்து வருகிறது. எனவே, ஏசி 3 வகுப்பை படிப்படியாக மேம்படுத்தி டிக்கெட் விலையை குறைத்து பயணிகளை ஈர்க்க ரயில்வே விரும்புகிறது.

அதனால் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் மக்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் செலவு செய்து 3AC எகனாமி வகுப்பில் பயணம் செய்யலாம்.

ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளை படிப்படியாக குறைத்து 3AC எகானமி கிளாஸ் பெட்டிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending