திருப்பதியில் தொடங்கப்பட்ட புதிய நவநீத சேவை!

Thirupathi
Thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவநீத சேவை என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை துவங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், டோலோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஏகாந்த சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தினமும் நடத்தப்படுகின்றன.

இது தவிர விசேஷ பூஜை அபிஷேகம், திருப்பாவாடை சகஸ்ர கலசாபிஷேகம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகிய சேவைகள் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாட்களில் வாராந்திர சேவைகளாக நடத்தப்படுகின்றன.

இவை தவிர மாதாந்திர, வருடாந்திர சேவைகளும் ஏழுமலையானுக்கு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கோகுலாஷ்டமி தினமான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

Thirupathi vennai
Thirupathi vennai

இந்த சேவையில் கீர் பசுக்கள் ஆன நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணை பெறப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் அந்த வெண்ணை கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வெண்ணெயை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் பக்தர்களாகிய ஸ்ரீவாரி தொண்டர்கள் கோசாலையில் வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பக்தர்கள் தயாரித்த வெண்ணெய் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories