மனநலம் பாதித்த பெண்ணிற்கு பிரசவம்.. குற்றவாளி உடனடி கைது! பெண் காவலர்களுக்கு குவியும் பாராட்டு!

delivery
delivery

ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற பெண் போலீஸார் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், இதற்குக் காரணமானவரை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் அங்கேயே தங்கியுள்ளார்.

அவர் யாரிடமும் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு செய்யாமலும் அங்கேயே இருந்துள்ளார். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கிச் சாப்பிடுவார். அவர் நைட்டி மட்டுமே அணிந்திருந்தார்.

mendaly challanged
mendaly challanged

இந்நிலையில் நேற்று காலை பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரைக்கு மேற்கு காவல் நிலையக் காவலர் சுகுணா என்பவர் யதேச்சையாகச் சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்துகொண்டு முனகிக் கொண்டிருந்தார்.

பிரசவ வலியால் அவர் துடிப்பதை உணர்ந்த சுகுணா, உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது அவருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக மேற்கு காவல் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து விட்டும் உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார்.

அப்போது அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேற்கு காவல் நிலையப் பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளைக் கொண்டுவந்து அந்தப் பெண் மீது போர்த்தி அவரைப் பாதுகாப்பாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண்ணைச் சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்தப் பெண்ணிடமிருந்து எந்தவிதத் தகவலையும் பெற முடியவில்லை. இதுகுறித்துக் காவல் ஆய்வாளர் பேபி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப் பிரியாவுக்குத் தகவல் கொடுத்தார்.

ஆதரவற்ற பெண்ணுக்குப் பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் போலீஸார் அனைவரும் அங்கு சென்று அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் காப்பாற்றியதைக் கேட்டு எஸ்.பி.ரவளிப் பிரியா பாராட்டினார்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெறக் காரணமாக இருந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்தப் பெண் ஒரே இடத்தில் இருந்ததால் யார் இந்த நிலைக்கு ஆளாக்கியது என அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, பாலக்கரையைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணைச் சந்தித்தது தெரியவந்தது.

delivary 2
delivary 2

இதையடுத்து நேற்று நள்ளிரவு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் இந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாகக் குற்றவாளியைக் கைது செய்த காவல் ஆய்வாளர் பேபி, அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமைக் காவலர் சரிதா, முதல் நிலைப் பெண் காவலர் சுகுணா ஆகியோரை இன்று தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories