Tulasi
Tulasi

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கொடூர தாய் துளசி தொடர்பான வீடியோ. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மணலப்பாடியை வடிவழகனின் (26), மனைவி துளசி (23).
இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) என இரு குழந்தைகள்.

இதில் பிரதீப்பை துளசி கொடூரமாக இந்த வழக்கில் போலீசார் விசாரணையில் நாள்தோறும் ஒரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது. அதாவது, கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வடிவழகன் தனது மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் தான் மனைவி செல்போனை வடிவழகன் பார்த்துள்ளார்.

அதில் இளைய மகன் குழந்தை பிரதீப்பை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டு அதிர்ந்துள்ளார். அதை அவரது உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

manikandan
manikandan

இதுகுறித்து, வடிவழகன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து ஆந்திர மாநிலத்துக்கு சென்று துளசியை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

மேலும் துளசி கொடுத்த அவரது கள்ளக்காதலன் பிரேம்குமாரின் செல்போன் எண் மூலம் போலீசார் அவரை தேடி வந்தனர். அதாவது கள்ளக்காதலை கண்டிக்கும் விதமாக தனது குழந்தையை அவர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

குழந்தையை தாக்கி அந்த வீடியோவை கள்ளக்காதலன் பிரேம்குமாருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து செல்போன் சிக்னல் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரேம்குமாரை கைது செய்தனர். ஆனால், விசாரணையில் அவரது உண்மையான பெயர் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

வடிவழகன், துளசி சென்னையில் இருந்தபோது செல்போனில் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போனிலேயே காதலை வளர்த்துள்ளனர்.

அப்போது, முதல் குழந்தை துளசியை போல் அழகாக இருப்பதாகவும், 2ஆவது குழந்தை பிரதீப் தந்தை முகஜாடையில் இருப்பதாகவும் கூறி, அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று துளசியிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதனால், அக்குழந்தை மீது துளசிக்கு வெறுப்பு துவங்கியுள்ளதாம். மேலும், நீ மட்டும் குழந்தை, கணவருடன் ஜாலியாக இருக்கிறாய்?, என்று குடும்பத்தை பிரிக்கும் விதமாக பேச்சில் ஈடுபட்டுள்ளார் காதலன்.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

ஒரு கட்டத்தில், நீ என்னுடன் வந்துவிடு, உன்னை சந்தோஷமாக நான் பார்த்துக்கொள்வேன் என்றும் ஆசைவார்த்தைகளை மணிகண்டன் கூறியுள்ளார்.

அவரது ஆசைவார்த்தைகளை நம்பிய துளசி, தனது 2வது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோவை எடுத்து, கள்ளக்காதலனை மகிழ்ச்சிப்படுத்த வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், கணவனை பிரிந்து செல்ல முடிவு செய்துதான் குழந்தையை அடித்து கொடுமை செய்து, குடும்பத்திலும் தகராறு செய்துள்ளார் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

மணிகண்டனிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் குழந்தையை தாக்கும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அதில் 4 மட்டுமே வெளியாகியுள்ளது.

பிரதீப்பை கொடூரமாக தாக்கி அந்த வீடியோவை, காதலனின் வாட்ஸ்அப் நம்பருக்கு துளசிதான் அனுப்பி வைத்துள்ளார். இத்தனைக்கும் துளசி, மணிகண்டனுக்கு ராங்க்கால் மூலம் அறிமுகம் ஆனவர் ஆவார்.

தற்போது பெற்ற குழந்தையை தாக்கிய துளசியும் ஆசை வார்த்தையை கூறி தூண்டி அதற்கு தூண்டுதலாக இருந்த மணிகண்டனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending