குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி!

vaccine - 2026

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு செலுத்தி (மனிதர்களுக்கு செலுத்தி) பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

கோபர்வேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, நாட்டில் 10 இடங்களில் பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 30 கோடி டோசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ரூ.1,500 கோடியை செலுத்தி உள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்காக பரிசோதிக்கப்படுகிற 4ஆவது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே குழந்தைகளுக்காக பாரத் பயோடெக், இந்திய சீரம் நிறுவனம், ஜைடஸ் கேடிலா ஆகிய 3 நிறுவன தடுப்பூசிகள் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால், அவர்கள் மத்தியில் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 20 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில், 6 சதவீதம் பேர் அதாவது, 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 224 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு, சிறுவர்கள் மத்தியில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து ஏப்ரல் மாதத்தில் 7.2 சதவீதமாக உயர்ந்தது.

மே மாதம் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் 73 ஆயிரத்து 555 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பில் 7.7 சதவீதமாக இருந்தது.

அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு மாநில அளவில் குறைந்தாலும் கூட தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் 8.8 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகவும், இறப்பு விகிதம் மிக மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories