உங்கள் சங்கடங்கள் தீர இந்த மந்திரம்..!

vinayakar 3
vinayakar 3

ஸங்கடநாஸன கணேச_ஸ்தோத்ரம்

( ஸ்ரீ நாரதர் அருளிய இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்வதால் வித்யை தனம் புத்ரன் மோட்சம் மற்றும் லாபங்கள் உண்டாகி கடன் வியாதி பயம் போன்ற கஷ்டங்கள் நீங்கும் )

ஸ்ரீ கணேசாய நம:

நாரத உவாச

ப்ரணம்ய ஸிரஸா தேவம்
கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யமாயு:
காமார்த்த ஸித்தயே

ஸ்ரீ கணேசரை நமஸ்கரித்து

நாரதர் சொல்கிறார்

( தேவனும் கௌரி புத்திரனும் பக்தர்களிடம் வசிப்பவருமான விநாயகப் பெருமானை ஆயுள் காமம் பொருள் இவைகளை அடைவதின் பொருட்டு தினமும் நமஸ்கரித்து வணங்கவும் )

ப்ரதமம் வக்ரதுண்டகம் ச
ஏகதந்தம் த்விதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம்
கஜவக்த்ரம் சதுர்த்தகம்

( முதலாவதாக வளைந்த துதிக்கையை உடையவனையும் இரண்டாவதாக ஒரு தந்தத்தை உடையவனையும் மூன்றாவதாக கருவிழிகளுக்கு அருகில் சிவப்புடன் கூடிய கண்களைக் கொண்டவனையும் நான்காவதாக யானைமுகம் கொண்டவனையும் துதிக்க வேண்டும் )

லம்போதரம் பஞ்சமம் ச
ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்னராஜம் ச
தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

( ஐந்தாவதாக தொங்குகிற வயிற்றை உடையவனையும் ஆறாவதாக மதஜலப் பெருக்கை உடையவனையும் ஏழாவதாக விக்னங்களுக்கு அரசனையும் எட்டாவதாக கருஞ்சிவப்பு நிறத்தை உடையவனையும் துதிக்க வேண்டும் )

நவமம் பாலசந்த்ரம் ச
தசமம் து விநாயகம்
ஏகாதசம் கணபதிம்
த்வாதசம் து கஜானனம்

( ஒன்பதாவதாக சந்திரனை நெற்றியில் தாங்கியவனையும் பத்தாவதாக விநாயகனையும் பதினொன்றாவதாக பூதகணங்களின் பதியையும் பனிரெண்டாவதாக யானைமுகத்தோனையும் துதிக்க வேண்டும் )

த்வாத சைதானி நாமானி
த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ந ச விக்னபயம் தஸ்ய
ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ:

( மேலே சொன்ன கணபதியின் இந்த 12 நாமாக்களையும் தினமும் மூன்று வேளை தவறாது எவர் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு சர்வ காரியமும் சித்தியாகி எந்த இடையூறும் ஏற்படாது )

வித்யார்த்தீ லபதே வித்யாம்
தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான்
மோக்ஷார்த்தீ லபதே கதிம்

( கல்வியை வேண்டுகிறவன் கல்வியையும் செல்வத்தை வேண்டுகிறவன் செல்வத்தையும் பிள்ளைப்பேறை வேண்டுகிறவன் பிள்ளைப்பேறையும் மோட்சத்தை வேண்டுகிறவன் மோட்சத்தையும் அடைகிறான் )

ஜபேத் கணபதி ஸ்தோத்ரம்
ஷட்பிர்மாஸை: பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச
லபதே நாத்ர ஸம்சய:

( இந்த நாமாக்களை 6 மாதம் ஜபித்தால் நினைத்த காரியம் கைகூடும் 1 வருடம் ஜபித்தால் அணிமாதி சித்திகள் கிடைக்கும் )

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யச்ச
லிகித்வா ய: ஸமர்பயேத்
தஸ்யா வித்யா பவேத் ஸர்வா
கணேசஸ்ய ப்ரஸாதத:

( எவர் ஒருவர் 8 வேதவித்துக்களுக்கு இந்த ஸ்தோத்திரத்தை எழுதிக் கொடுக்கிறாரோ அவருக்கு சகலவிதமான வித்தைகளும் கணபதியின் அருட்பிரசாதத்தினால் கைகூடுகிறது )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories