இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு கூறிய இளைஞர் கைது!

Jitender Singh
Jitender Singh

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராஜஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் இவர் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும் சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் உளவு பிரிவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் ஜிதேந்தர் சிங்கை கைது செய்து 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜிதேந்தர் சிங் முகநூல் மூலமாக பழகிய ஒரு பெண் கூறியதால், இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் மேலும் அந்தப் பெண் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து இந்திய ராணுவம் குறித்த சில புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அனுப்பி வைக்க சொன்னதாகவும் தெரிகிறது.

அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை ஜிதேந்தர் சிங் பூஜாஜி என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த எண்ணுக்கு பல தகவல்களை அனுப்பியதுடன் அந்த தகவல்கள் அனைத்தையும் அவர் செல்போனில் இருந்து அழித்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து அவர் யார் யாரிடம் பேசி வந்துள்ளார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் போலீசார் ஜாலிமொகல்லாவில் ஜிதேந்தர்சிங் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தனர் செய்தனர் அப்போது வீட்டில் இருந்து ராணுவ வீரர் சீருடை, சிம்கார்டுகள் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories