தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக ரெடியா..? நாளை முதல் முன்பதிவு!

private bus - 2026

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி (வியாழன்) வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறுஎன தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் வசிக்கும் வெளியூர்மக்கள் முன்கூட்டியே சொந்தஊர்களுக்குச் செல்ல திட்டமிடு வார்கள்.

விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, அரசு விரைவு பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை,திருப்பூர், சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு, படுக்கை வசதி கொண்ட சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள், விரைவு, சொகுசு பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பால் கடந்த தீபாவளியின் போது பயணிகள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. இதனால், சிறப்பு பேருந்துகளும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.

கடந்த 2019-ல் தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories