வலிமை: பல சுவாரஸ்ய தகவல்களும், லேட்டஸ்ட் புகைப்படங்களும்..!

Published:

ajith kumar
ajith kumar

தமிழ் திரைப்பட உலகில் அஜித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறார்.

இவர் தற்போது இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இப்படம் துவங்கியது முதலே இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு கேட்டு ஒருகட்டத்தில் அவர்கள் ஓய்ந்தே போனார்கள்.

ajith 1 3
ajith 1 3

தற்போது இப்படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். முதலில் இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. அதன்பின்,

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இரண்டும் இல்லாமல் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சென்றுவிட்டது.

அஜீத் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பைக்கில் சில நாடுகளுக்கு பயணம் சென்று சில பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
ajith valimai
ajith valimai

துவக்கம் முதலே இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வந்தது. பேட்ட படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹியூமா குரோஷி.

அவர்தான் வலிமை படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்துவிட்டது. ஆனால், அவர் அஜித்துக்கு ஜோடியா என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இதுபற்றி ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ள வலிமை பட இயக்குனர் வினோத் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி என யாருமில்லை.

ajith kumar thala
ajith kumar thala

ஹியூமா அவரின் தோழியாக மட்டுமே நடித்துள்ளார். படத்தில் எந்தவித ரொமான்ஸ் காட்சிகளும் இல்லை. என அதிர்ச்சி கொடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ஜோடி இல்லாமல் அஜித் நடிக்கும் படமாக வலிமை உருவாகியுள்ளது.

‘நம்ம வீட்ல அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ போலிஸா இருந்தா எப்படி இயல்பா இருப்பாங்களோ அப்படி தான் அஜித் சார் கேரக்டர் வலிமை படத்துல இருக்கும்’ என கூறியுள்ளார்.

இதுதவிர அஜித் இப்படத்தில் உண்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார்’ என்று கூறலாம்.

அதேபோல் வலிமை படம் பைக் ரேஸ் படம் அல்ல. ஆனால் இப்படத்தில் 3 பெரிய பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அது மட்டும் இல்லாமல் மக்கள் பிரச்சனையை சொல்லும் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

வலிமை படம் குறித்து அப்டேட் வராதா என ஏங்கிய ரசிகர்களுக்கு இயக்குனரே அப்டேட் கூறியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே வலிமை படத்தின் சில புகைப் படங்கள் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெளியான வலிமை புகைப்படம் காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி ‌அஜித்தின் ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட வீடியோ யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட்டார் போனி கபூர்.

நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் மலைதான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்’ என்று வில்லன் கார்த்திகேயா குரல் ஒலிக்க அஜித்தில் கால் தீப்பொறியுடன் பதிக்க யுவன் இசையும் சேர்ந்து கவனம் ஈர்த்தது ‘வலிமை’ கிளிம்ப்ஸ். அஜித் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘வலிமை’ கிளிம்ப்ஸ் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகள் அதாவது 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமுடன் கொண்டாடி வருகிறார்கள்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img