ஏ.ஆர்.முருகதாஸை நவ.27ம் தேதி வரை கைது செய்ய தடை!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

ar murugadoss - 2026

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமின் மனு மீது பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டது.

அதன்படி பிற்பகல் 2.30 மணி அளவில் முருகதாசின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், வரும் நவ.27ம் தேதி வரை சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதிப்பதாகக் கூறி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, சர்கார் பட அரசியல் காட்சிகள் தொடர்பாக முருகதாஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, நள்ளிரவில் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டி போலீசார் கைது செய்ய ஆயத்தமாக இருந்ததாக முருகதாஸ் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.