கட்டாய ஹெல்மெட் விவகாரம்… நீதிபதி வருத்தம்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

HELMETS 1 - 2026

சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது; ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவர் அணிவதில்லையே… என்று வருத்தத்துடன் கூறினார்.

ஹெல்மெட் விவகாரத்தில், சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவு, காவல்துறையின் விழிப்புணர்வு இப்படி பல இருந்தாலும் சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் என்று வாக ஓட்டிகளை அறிவுறுத்தினார் நீதிபதி.

வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து பொறுப்புடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய உயர் நீதிமன்ற நீதிபதி, ஹெல்மட் அணிவது அதிகரித்தாலும் பைக்கில் பின்னால் அமருவோர் அணிவதில்லை என வருத்தத்துடன் கூறினார்.

ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயமாக்கக் கோரி கொரட்டூர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில்தான் இந்தப் புகார் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.