ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி சார்பாக தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. ரோட்டரி கிளப் சக்தி தலைவர் டாக்டர் எம் பி அனுஜா தலைமை தாங்கினார். ஏஜி மாடசாமி ஜோதிடர், டாக்டர் மாரிமுத்து, செல்வநாயகம், சம்சு, இன்ஜினியர் பொன்ராஜ், ஜெகன்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டத்தில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. அதன் தலைப்பாக மானுடம் சிறப்பது செல்வத்தாலே என்று பூசை துரைச்சி மற்றும் மீனாட்சி ஆகியோரும், மானுடம் சிறப்பது மனித நேயத்தால் என்றுபத்மாவதி மற்றும் லாயர் முத்துலட்சுமி ஆகியோரும் இரு குழுவாக இருந்து பேசினார்கள்.
அரங்கத்திற்கு தலைமை வகித்து தீர்ப்பு வழங்கினார் திருமதி பொன்னி. தொடர்ந்து, சினிமா வினா விடை போட்டி நடைபெற்றது. பின்னர், மாஸ்டர் தேவி தர்ஷன் குலேபா பாடலுக்கு நடனமாடினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ரோட்டரி கிளப் நண்பர்களுக்கும் சிறப்பு பரிசு மற்றும் உணவு வழங்கப்பட்டது. நிறைவாக, ரோட்டரி கிளப் சக்தி சார்பாக செயலர் சரஸ்வதி நன்றி கூறினார்.




