உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் உள்ளே.. வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Potato chips
Potato chips

அனைவருமே விரும்பும் ஒரு உணவுபண்டம் என்றால் அது உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பதை அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கலாம்.

உணவு சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. ஆனால், போய்ஸ் என்பவர் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் வினோதமான தின்பண்டம் பேக் செய்யப்பட்டிருந்தது.

பொதுவாக தின்பண்டங்கள் விற்பனையாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தின் பண்டங்கள் அதிகமாக விற்பனையாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பல்வேறு மார்க்கெடிங் உத்திகளைப் பயன்படுத்துவார்கள்.

அதில் முக்கியமானவை, சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்களை சேர்ப்பது. சிப்ஸ் பாக்கெட்டில் சூப்பர் ஹீரோவின் பொம்மை அல்லது ஸ்டிக்கர் இருந்தால் குழந்தைகளை எளிதாகக் கவர முடியும்.

ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்சுக்கு பதிலாக பாதி தோல் உரிக்கப்பட்ட பச்சையான உருளைக்கிழங்கு காணப்பட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியரான Dr. டேவிஸ் போய்ஸ் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்ஸுக்கு பதிலாக பச்சையான முழு உருளைக்கிழங்கு இருந்ததைப் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதை உடனே புகைப்படம் எடுத்து அந்த படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிப்ஸ் பாக்கெட்டுக்குள் சிப்ஸுக்கு பதிலாக உருளைக்கிழங்கு இருந்த புகைப்படத்தில், எந்த நிறுவனத்தின் சிப்ஸ் என்பதும் தெளிவாகக் காணப்படுகிறது.

மேலும் அவர் தனது பதிவில், “நான் ஒரு பாக்கெட் கெட்டில் சிப்ஸ் UK வாங்கி பிரித்து பார்த்த போது, அதில் கிரிஸ்ப்ஸ் எதுவும் இல்லை. ஒரு முழு உருளை மட்டும் தான் இருந்தது” என்று கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.

போய்ஸ் பகிர்ந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, இவர் வாங்கியது கெட்டில் சிப்ஸ் யுகே வின் செடார் மற்றும் சிவப்பு ஆனியன் சுவையூட்டப்பட்ட சிப்ஸ் என்பதை அறிய முடிகிறது.

இந்த பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே சமூகவலைத்தளங்களில் 500க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. கெட்டில் சிப்ஸ் நிறுவனமும் இவரை உடனடியாக தொடர்பு கொண்டது.

“உருளைக்கிழங்கு எப்படி சிப்ஸ் பாக்கெட்டுக்குள் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள எங்களுக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்ப முடியுமா?” என்று போய்ஸ் பதிவுக்கு கெட்டில் சிப்ஸ் நிறுவனம் கமென்ட் பிரிவில் கோரியிருந்தது.

திருப்தியடையாத வாடிக்கையாளர் போய்ஸ், “சரி, இன்னும் அந்த உருளைக்கிழங்கு என்னிடம் தாம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நடந்திருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்று பதிலளித்திருந்தார்.

பாக்கெட்டில் சிப்சுக்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்ததை பார்த்த உடன் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு “முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுத்ததாக பாக்கெட்டுக்குள் எப்படி கிழங்கு வந்திருக்கும் என்ற கேள்வி தோன்றியது. பின்னர், இந்த உருளைக்கிழங்கு நிஜமாகவே ஒரு சாம்பியன் தான். சிப்ஸாக மாறாமல் எப்படியோ தன்னைக் காப்பாற்றிக் கொண்டு பாக்கெட்டுக்குள் இடம் பிடித்து விட்டது” வேடிக்கையாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories