இறந்த மனைவிக்கு இறுதி சடங்கு செய்த கணவன்! 6 ஆண்டுகள் கழித்து உயிருடன் கண்ட அதிர்ச்சி!

kenya
kenya

கென்யாவில் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவியை தற்பொழுது உயிருடன் பார்த்த கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

கென்யாவை சேர்ந்த உச்சங்கா கயிரூ. இவரது மனைவி லஹிரா அபிகைல். கடந்த 2015ஆம் ஆண்டு லஹிரா உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது சடலத்திற்கு இறுதிச் சடங்கையும் செய்து வைத்துள்ளார் உச்சங்கா.

இந்நிலையில் தற்பொழுது கென்யா தலைநகர் நைரோபியில் உச்சங்கா சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு தனது மனைவியை உயிருடன் ஒரு இளைஞருடன் பார்த்துள்ளார்.

அப்பொழுது 6 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த மனைவி இங்கு எப்படி நடந்து செல்கிறார் என உச்சங்கா அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார். பின்னர் உச்சங்கா அப்பெண்ணிடம் சென்று நீ லஹிரா தானே என்று கேட்டுள்ளார்.

Lahira Abigail
Lahira Abigail

அதற்கு அப்பெண்ணும் ‘ஆம்’ என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் லஹிரா இறந்துவிட்டதாக நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து உச்சங்கா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கானது தற்பொழுது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளது. உச்சங்கா கூறியதாவது, “என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, அவள் என் எதிரில் புதைக்கப்பட்டாள். ஆனால் அவள் மீண்டும் உயிருடன் இருப்பதைப் தற்போது பார்த்தேன்” என்று அதிர்ச்சியுடன் பேசி உள்ளார்.

திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்க லஹிரா தனது போலி மரண நாடகத்தை அரங்கேற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காதலனுடன் வாழ விரும்புவதால் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவரது கணவர் உச்சங்காவோ விவாகரத்து வழங்க மறுத்து விட்டார்.

இதுபற்றி மனம் திறந்த லஹிரா, திருமணத்திற்கு பிறகு நான் நடத்தப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது, என் கணவருடன் மகிழ்ச்சியாக இல்லை, சுதந்திரம் தேவை என்பதால் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், நைரோபி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories