விமான பணிப்பெண் மூக்கில் குத்தி இரத்தம் வரச் செய்த பயணி!

flight - 2026

விமானப் பணிப்பெண்ணை முகத்தில் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று விமானப் பணியாளர்கள் அறிவிப்பு செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் விமானம் பறக்கத் தொடங்கியது.

விமானம் பறந்துகொண்டிருந்தபோது, பணிப்பெண் ஒருவர் பிசினஸ் கிளாசில் பயணித்த ஒருவரைப் பார்த்தார். அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால், அவரிடம் அணியுமாறு புன்னகையுடன் பணிவோடு சொன்னார்.

ஆனால், அந்தப் பயணி படாரென்று அவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் சுதாரிப்பதற்குள் அடுத்தும் ஒரு குத்துவிட்டார். இதில் விமானப் பணிப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

அவர் அங்கிருந்து வெளியேற, அக்கம் பக்கத்து பயணிகள் அவரை அப்படியே பிடித்துக் கொண்டனர். பின்னர் டேப்பால் அவர் கைகளை இருக்கையில் கட்டினர். இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக டென்வர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. விமானம் நின்றதும் அந்த வன்முறை பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மெக்கன்ஸி ரோஸ் என்ற பயணி கூறும்போது, அந்த பயணி இரண்டு முறை அவர் முகத்தில் குத்தியதாக உணர்கிறேன்.

இதனால் அவர் அணிந்திருந்த முகக் கவசத்தின் வெளியே ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தேன். ஆண்கள் பெண்களை அடிப்பது அபத்தமானது மற்றும் கேலிக்கூத்தானது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories