சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் கொள்ளை! பண்ருட்டியில் பெரும் பரபரப்பு!

kovil undilal
kovil undilal

கும்பாபிஷேகம் நடந்தது 20 நாட்களே ஆன அய்யனார் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே வீரசிங்கன் குப்பத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அப்பகுதியைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவர் இருந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கோவிலில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கோவிலைத் திறந்த அய்யாக்கண்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலில் கிரில் கம்பிகளுக்கு நடுவில் கட்டியிருந்த உண்டியலை மர்ம நபர்கள் வெளியில் இருந்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கோவில் தர்மகர்த்தா அய்யாகண்ணு முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து தடயங்களை சேகரித்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் பணத்தை மீட்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories