மனித உடலில் ஃபுளோரைடு வடிவில் காணப்படும் ஃபுளோரின் எனும் ரசாயனம், விண்மீன் மண்டலத்தில் பூமியில் இருந்து 1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் ஃபுளோரின் ரசாயனம் ஃபுளோரைடு வடிவில் இடம்பெற்றுள்ளது.
சூரிய குடும்பத்தில் மட்டுமே இந்த ரசாயனம் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், விண்மீன் மண்டலத்தில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களிலும் இடம்பெற்றிருப்பதை சிலியில் உள்ள தொலைநோக்கி வாயிலாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.