இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்பு! தாய் பூரிப்பு!

Harikumar1 - 2026

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார். அவரை கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தில்லியில் தெற்கு பிளாக்கில் நடந்த விழாவில் அட்மிரல் ஹரிகுமார் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக இன்று பொறுப்பேற்றார்.

பதவியேற்பு விழாவில் அட்மிரல் ஹரிகுமாரின் தாயார் அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், இது தனக்கு பெருமை தரும் பதவி என்றும் தனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

hari kumar - 2026

அட்மிரல் ஹரிகுமாருக்கு தற்போது 59 வயதாகிறது. பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவர், இந்திய கடற்படையில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக மும்பையில் உள்ள வெஸ்டர்ன் நேவி கமாண்ட் தலைவராக அவர் பணிபுரிந்து வந்தார். ஐஎன்எஸ் விராட், ஐஎன்எஸ் ரன்வீர் ஆகிய போர் கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார்.

இவரது கடற்படை சேவைக்காக இவருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஸ்ட் சேவா பதக்கம் போன்றவை அரசால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories