கோவில் பூட்டை திறந்து திறந்து பார்த்தும் முடியல… பறந்து போன திருடன்!

temple theft - 2026

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் நாடியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மிகவும் பழமையானதும், அக்கிராமத்திற்கு சொந்தமான கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பான முறையில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலுக்கு ஏராளமானோர் குலதெய்வமாக இருப்பதால், வெளிநாடு, மாவட்டத்திற்கு வேலைக்காரணமாக சென்றவர்கள், விழாக்காலங்கள் மட்டுமில்லாமல், தினந்தோறும் கூட்டமாக வந்து, தரிசனம் செய்வார்கள்.

இதனால் இக்கோயில் அப்பகுதியில் பிரபலமான கோயிலாகும்.அதிக கூட்டம் வருவதால், உண்டியலில் அதிக அளவில் வருமானமம் உள்ளதால், இது வரை மூன்று முறை மர்மநபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

இது பற்றி அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள. போலீசாரும் வந்து விசாரணை செய்து விட்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுவார்கள்.

திருட்டு குறித்து போலீசாரிடம் கேட்டால், திருடன் கிடைத்தால் விசாரணை செய்கின்றோம் என்று கூறி அனுப்பி விடுவார்கள். இதனால் கிராம மக்களும் வேறு வழியின்றி விட்டு விடுவார்கள்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து இரும்பு கடப்பாரை போல் உள்ளதை வைத்து கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க 1 மணிநேரமாக முயற்சித்துள்ளார்.

அப்போது பல முறை பலவிதமான முறையில் முயற்சிப்பார். ஆனால் நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்றும், கருவறையில் பூட்டை உடைப்பதில் குறியாக மர்மநபர் இருப்பார். ஆனால் பல முறை முயற்சித்தும் உடைக்க முடியாததால், விட்டு விட்டு சென்று விடுவார்.

இந்த சம்பவ காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மீண்டும் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுபற்றி இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், இக்கோயிலுக்கு சொந்தமானவர்கள், வெளிநாடு, மாவட்டத்தில் இருப்பதால், அதிக வருமானமும், விலை அதிக உள்ள பொருட்களும் உள்ளன.

இதனையறிந்த மர்மநபர்கள், அடிக்கடி இக்கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெறுகின்றது. தற்போது நடந்த கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதுவரை மனு ரசீது கூட வழங்கவில்லை.

கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரின் அலட்சியத்தால், கோயில் நகைகள், உண்டியல்கள் மற்றும் விலை அதிகமாக உள்ள பொருட்கள் பெரிய அளவில் கொள்ளை நடந்து போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

எனவே உடனடியாக உயரதிகாரிகள் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories