வெடித்த எரிமலை.. சூழ்ந்த சாம்பல் புழுதி!

Volcano - 2026

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக ஜாவா தீவுகளில் வானில் சுமார் 40 ஆயிரம் அடிகள் உயரத்திற்குப் புகையும், சாம்பலும் பரவியிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

அப்பகுதி மக்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களில் வானில் இருந்து பெரிய குவியல்களாக சாம்பல் விழுவது பதிவிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் லுமாஜங் நகரத்தில் உள்ள செமெரு எரிமலை நேற்று மதியம் சுமார் 2.50 மணிக்கு வெடித்துள்ளது. இதுவரை யாரும் மரணமடையவில்லை என்ற போதும், மீட்புப் பணியினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிமலை வெடித்ததால் வானில் கருமேகங்கள் கடுமையாக சூழ்ந்து, சூரிய வெளிச்சம் முழுமையாக மறைந்துள்ளது. லுமாஜங் நகரத் தலைவர் தொரிகுல் ஹக் அப்பகுதி ஊடகங்களிடையே பேசிய போது, `கடுமையான சாம்பல் வெளியேற்றம் அருகில் உள்ள பல கிராமங்களை இருளில் மூழ்கச் செய்துள்ளது.

எரிமலை வெடித்ததால் லுமாஜங் நகரத்தை அருகில் உள்ள மலாங் நகரத்துடன் இணைக்கும் பாலம் முழுவதுமாகத் தகர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் எரிமலை வெடிப்பு, கன மழை ஆகியவை ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

எரிமலை சாம்பல் அறிவுரைக் குழு சுமார் 40 ஆயிரம் அடிகளுக்கு வானில் சாம்பல் எழுந்துள்ளதாகவும், அதன்பிறகு மழையாக மாறி மக்கள் மீது பொழிந்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேக்மா இந்தோனேசியா என்ற அமைப்பு எரிமலைகள், நில அதிர்வு, சுனாமி முதலானவற்றைக் கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பு இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5160 நொடிகள் நிகழ்ந்திருப்பதாகக் கணித்துள்ளது.

எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தடுப்பு நிறுவனம் சார்பில் கண்காணிக்கப்பட்டதில், எரிமலையில் இருந்து சுமார் 500 முதல் 800 மீட்டர்கள் வரை எரிமலைக் குழம்பு பரவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் புடி சாண்டோசா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், `செமேரு எரிமலை வெடிப்பால் சூடான சாம்பல் மேகங்களில் இருந்து விழும் நிகழ்வுகள் தென்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் லுமாஜங், சும்பெர்வுலு கிராமம், கண்டிபுரோ மாவட்டம், சுபிடுராங், ப்ரோனோஜிவோ முதலான பகுதிகளில் சூடான சாம்பல் விழும் நிகழ்வுகள் தென்பட்டிருப்பதாகவும், அதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுவரை இறப்புகள் எதுவும் நிகழவில்லை என்றும், தொடர்ந்து தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஜாவா, லுமாஜங் பகுதிகளைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் இந்தப் பகுதிகள் விரைந்து பாதிப்புகளைக் கணக்கெடுப்பது, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது முதலானவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாவா தீவுகளில் உள்ள செமேரு எரிமலை அப்பகுதியின் மிக உயர்ந்த மலையாகும். இது இந்தோனேசியாவில் உள்ள 130 எரிமலைகளுள் ஒன்று. கடந்த 1818ஆம் ஆண்டு முதல் இந்த எரிமலை சுமார் 55 முறை வெடித்துள்ளது. அவற்றுள் 10 முறை மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories