இது தான் சூரியன்.. வானியல் புகைப்படக் கலைஞர் வெளியிட்ட படம்!

sun - 2026

அக்னி குழம்புகளால் சூழப்பட்ட மிகப்பெரிய விண்மீண் தான் சூரியன்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாக திகழும் பகவலன். சூரியனின் மேற்பரப்பு எப்போதுமே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும். எவ்வளவோ ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்தும் கூட அந்த சூரியனை நம் கண்களால் சில நொடிகள் கூட பார்க்க இயலாது. நிலா, செவ்வாய்க்கு செல்லும் விஞ்ஞானிகளால் சூரியனை நெருங்க கூட முடியவில்லை.

ஆனால் அதிநவீன தொலைநோக்கி (Telescope) மூலம் அதன் மேற்பரப்பை பார்க்க முடியும். அவ்வாறு பார்த்து அதனை படம் பிடித்தும் வெளியிட்டிருக்கிறார் வானியல் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி.

அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். வித்தியாசமான முறையில் தொலைநோக்கியால் படம்பிடித்துள்ளார்.

அதாவது சூரியனின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக 1 லட்சத்து 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர் அவையனைத்தையும் ஒன்றிணைத்து சூரியனின் முழு புகைப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார்.

இறுதியில் அந்த புகைப்படம் 300 MP சைஸில் வந்துள்ளது. இது 5MP சைஸ் கொண்ட சாதாரண போன் கேமராவை விட 60 மடங்கு அதிகமானது.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த மெக்கார்த்தி, இந்தப் புகைப்படம் உலகத்திற்கும் தனக்கும் மிகவும் ஸ்பெஷலான புகைப்படம் என்றும், சூரியனை ஒவ்வொரு முறை படம்பிடிக்கும் போதும் உற்சாகமாக உணர்வதாகவும் கூறுகிறார்.

இயல்பாகவே சூரியனின் மேற்பரப்பை படம்பிடிக்க இரண்டு தொலைநோக்கி ஃபில்டர்கள் தேவைப்படுகின்றன. ஒன்று படம்பிடிப்பவரின் கண்களை சூரியனிடமிருந்து காப்பாற்றும்.
மற்றொன்று தொலைநோக்கி எரிவதிலிருந்து காப்பாற்றும்.

ஏனென்றால் கேமராவை நோக்கி சூரியன் அதிகப்படியான ஒளியை வெளிப்படுத்தும். ஆனால் மெக்கார்த்தியோ அதிக உருப்பெருக்கத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்ட தொலைநோக்கியை (Modified Telescope) பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

இவருக்கு முன்பாகவே பலர் சூரியனின் மேற்பரப்பு இப்படி தான் இருக்கும் என புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவையெல்லாம் சாப்ட்வேரால் வடிவமைக்கப்பட்டவை எனக்கூறி போலியானது என முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CW6VudMvbzA/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories