சக்கரபாணி சுவாமி கோயில் உண்டியலில் சூயிங்கம் வைத்து திருட்டு! இதெல்லாம் திருட்டா.. போலீசார் அசால்ட் பதில்!

undiayal theft - 2026

கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயிலிலுள்ள பெருமாள்
சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.

இந்தியாவிலேயே சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார். வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.

chakarapani temple - 2026

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில், மகாமகத்திருவிழாவின் போது முதன்மையானதாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் இரவு காவல் பணியில், பகல் வாட்ச்மேன் சேகரின் மகன் சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அலுவல் பணிக்காக கோவில் அதிகாரிகள், திடிரென ஆய்வு செய்த போது, அக்கோவிலில் இரவு வாட்சுமேன்களான சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கோவில் சன்னதி மற்றும் கருவறை அருகே உள்ள உண்டியல்களில் நூதன முறையில் பணத்தை திருடும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் கோவிலிலுள்ள இரவு நேர சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் கடந்த மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் அதேபோல் உண்டியலில் இருவரும் பணத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

chakarapani temple undial theft - 2026

சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இரவு நேரத்தில், அதிகாரிகள் கோவிலை பூட்டி சாவியை கொடுத்து விட்டு, சென்ற பிறகு கோவிலை திறந்து கோவில் கருவறை மற்றும் சன்னதி பகுதிகளிலுள்ள உண்டியல்களில் பக்தர்கள் பணம் செலுத்தும் துவாரம் வழியாக செல்போன் கேமரா மூலம் ப்ளாஷ் லைட் அடித்தபடி உண்டியல் பணம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை அறிந்து அதன் அளவு நீள கம்பியை எடுத்து அதில் சுவிங்கத்தை ஒட்ட வைத்து உண்டியலுக்குள் விட்டு ரூ100, 200 மற்றும் 500 நோட்டுக்களாக பார்த்து பார்த்து நூதன முறையில் திருடியுள்ளனர்.

இரவு நேர செலவிற்காக பணம் தேவைப்படும் போது, திருடி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகேசன் கோவில் உண்டியலில் பணத்தை திருடிய சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

watch man - 2026

போலீசார். கோயில் அதிகாரிகளிடம், உண்டியலில் ரூ. 100, ரூ.200 பணத்தை திருடியதற்கு எல்லாம் கேஸ் போட முடியாது, அதிகமான தொகை திருடியிருந்தால் மட்டும் தான் கேஸ் போட முடியும் என்று பதில் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோயில் அதிகாரிகள், உலக புகழ்பெற்ற பெருமாள் கோயிலில், உண்டியலில் திருடியதை சிசிடிவி காட்சியுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது என கோயில் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

watchman - 2026

குட்டிபுலி எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் இதேபோல் கோவில் உண்டியலில் குச்சியில் சுவிங்கத்தை ஒட்டி பணத்தை நூதன முறையில் திருடும் காட்சி அமைந்திருக்கும்.

தற்போது அதே முறையை பயன்படுத்தி கும்பகோணம் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்ட நபர்கள் பணத்தை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories