உலகக் கோப்பை : நியூஸிலாந்துக்கு 289 ரன் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

சற்றுமுன்

newzealand-bangladesh உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்க தேச அணி, 288 ரன் எடுத்து, 289 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்த்து. வங்க தேச வீரர் மெஹ்மதுல்லாவின் அசத்தல் சதம் இந்த ரன் குவிப்புக்கு கைகொடுத்தது. ஹாமில்டனில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஆடக் களம் இறங்கினர். தொடக்கத்தில் வங்கதேச அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறியது. இவ்வணி 10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் இணைந்த சர்க்கர் மற்றும் மெஹ்மதுல்லா ஜோடி சற்று பொறுப்பாக ஆடியது. தொடர்ந்து அசத்திய சர்க்கர் அரைசதத்தை கடந்து 51 ரன்னில் வெளியேறினார். பின் வந்த சாகிப், முஷ்பிகுர் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மெஹ்மதுல்லா சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் மெஹ்மதுல்லாவின் 2 ஆவது சதம். இறுதியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. மெஹ்மதுல்லா 128 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து 289 ரன் வெற்றி இலக்காகக் கொண்டு நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.