கொரோனா- நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

madurai collector office - 2026

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர்:

மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதி, தங்கும் விடுதி, மண்டபம், சந்தை, கேளிக்கை விடுதி, பேருந்துகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்;கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருகை குறித்து தனிப்பதிவேடு பராமரித்து அதில் தடுப்பூசி செலுத்திய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வரும் பட்சத்தில் அவர்களை, தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி, ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் 12 சிறப்பு கண்காணிப்பு
க்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் இக்குழு ஆய்வு செய்யும். 17.02.2021 அன்று சுமார் 165 வணிக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி கண்காணிப்பு குழுக்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்
பட்டது. இதில், வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சில வணிக நிறுவனங்களுக்கு ரூ.26400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக் கொள்ளுமாறும், பொது இடங்களில் முகக்கவசம், தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories