சிரிக்கும் போது எவ்வளோ அழகா இருக்க.. ரஜினி வெளியிட்ட வீடியோ!

Published:

rajinikanth
rajinikanth

பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், தனது மகளான செளமியா உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக கிடப்பதாகவும், மகள் உங்களை பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செளமியாவுக்காக பிரார்த்திப்பதாக கூறி ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய ரஜினி, ‘ஹலோ செளமியா, எப்படி இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகாது. சாரி கண்ணா.. என்னால உன்ன வந்து பாக்க முடியாது. இப்ப கொரோனா இருக்குறதனால, எனக்கும் உடம்பு சரியில்ல.. இல்லனா உன்ன வந்து பார்த்துருப்பேன் கண்ணா.. தைரியமா இரு.. உனக்காக நான் பிரே பண்றேன். சிரிக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய்.. எல்லா சரியாகிவிடும்’ என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img