சில நேரம் நாம் செல்போனை சைலண்டில் எங்காவது வைத்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது கஷ்டமாகிப்போகும்
செல்போனுக்கே இந்த கதை என்றால், பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் பெரிய தலைவலி.
இதற்காகத்தான் ஒரு கருவியை கண்டிபிடித்தது ஆப்பிள். அதுதான் ஏர் டேக். இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.
ஏன்.? உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம். அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும்.
அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி ஓனரை கண்டுபிடித்துவிடலாம்.
எந்த கண்டுபிடிப்பு என்றாலும் அது சில நெகட்டிவ் பக்கமும் இருக்கும். பொருளை கண்டுபிடிக்க பயன்படுத்த உருவாக்கப்பட்ட இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் நான் ஏர் டேக்கை நான் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த சிக்கலை எதிர்கொள்ள ஆப்பிள் தனி வசதியை உருவாக்கியது. ஓனர் அருகே இருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான ஏர் டேக் ஒருகில் இருந்தாலோ நம்மை அலெர்ட் செய்யும் வசதி கொடுக்கபட்டது.
ஆனால் இது ஆப்பிளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படலாம் என தொடந்து குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யவே தற்போது ஒரு செயலியை ஆப்பிள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கொடுத்துள்ள ஏர்டேக் செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டால் நம்மை எதாவது ஒரு ஏர் டேக் பின் தொடர்கிறதா என கண்டுபிடிக்கலாம்.
அதே ஆப் மூலம் சில நல்ல வசதிகளும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்கும் என்கிறது ஆப்பிள்.