தைப்பூசத் திருவிழா: செங்கோட்டை, நெல்லையப்பர், கழுகுமலை கோவில்களில் கொடியேற்றம்!

Screenshot 2022 0110 115549 - 2026

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 4-ம் நாளில் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடைபெறும்.

5-ம் திருவிழாவில் தைப்பூச மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரியும், மறுநாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. வழக்கமாக டவுன் ஆர்ச் அருகே உள்ள வெளித்தெப்பத்தில் தெப்பத் திருவிழா நடக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக உள்தெப்பத்தில் இவ்விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெற உள்ளது.

nellai - 2026

கழுகுமலை

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

கொடிமரத்துக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களுக்கு பின்னர், 8 மணிக்கு மேல் திருக்கொடியேற்றி மகாதீபாராதனை நடந்தது. கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருவிழாவின் முதல் நாளான நேற்றிரவு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ம் திருநாளான தைப்பூசத்தன்று (18-ம் தேதி) காலை 6 மணிக்கு சுவாமி சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமான் கோரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோயில் தலைமைக் கணக்கர் செண்பக ராஜ் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

செங்கோட்டை
தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் திருவிழா கொரோனா காரணமாக அரசு வழிக்காட்டுதல்களுக்கு உட்ப்பட்டு நடைப்பெறள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories